Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturist
Chennai, India
Joined on 28 December, 2015
என் மீது அன்பு கொண்டவர்களுக்கு ஓர் அறிவிப்பு.
’பொறு, கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்’ என்று காலத்தோடு மோதியவர் என் அண்ணன் எம்ஜியார். அமெரிக்க சிகிச்சை முடிந்து அதிக ஆற்றலோடு திரும்பி, அவர் அரியணை ஏறிய வரலாற்றைச் சொல்கிறது ‘காலத்தை வென்றவன்’. (1/2)
அந்தப் படத்தை இங்கே வெளியிடுகிறேன். வாழ்க்கையில் வெல்ல நீங்களும் பார்ப்பீர்கள்.(2/2)
#நாளை_நமதே
விவசாயிகளின் தேவை அறிந்து வழங்கும் 'பெர்சனலைஸ்டு மானியம்' மக்கள் நீதி மய்யத்தின் செயல் திட்டம்.
#உழவே_தலை_உழவனை_நினை
(2/2)
ஒரு யானை துயிலும் அளவுள்ள நிலத்தில் ஏழு யானைகள் உண்ணும் அளவிற்குத் தானிய விளைச்சல் மிகுந்து இருந்தது என்கிறது புறநானூறு. வேளாண்மை எனும் சொல்லுக்குள் ஈகையும், கொடையும் சேர்ந்தே ஒலிக்கிறது.
(1/2)
Happy to release the novel 'A Madras Mystery' written by @rangarajan_ias. Best wishes!
ராணுவத்தில் தமிழர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம். போர்வீரர் வெல்க; சோறிடுவோர் உயர்க.
(2/2)
விடுதலைப் போரில் தமிழர்களின் பங்கு வெளித்தெரியவே வெகுகாலம் ஆயிற்று. தகவல் தொடர்புக் குறைபாடு, மொழி இடைவெளி போன்ற காரணங்களால், இன்று இந்திய ராணுவத்தில் தமிழர்களின் பங்களிப்பும் போதுமான அளவு புரிபடவில்லை.
(1/2)
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது.
(1/2)
இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்!
(2/2)
கொங்கு மண்டலத்தில் ஆர்டர்கள் இருந்தும் போதிய தொழிலாளர்கள் இல்லாமல் தொழில்துறையினர் தவித்து வருகின்றனர். லாக்டவுணில் வெளியேறிய வட மாநில தொழிலாளர்களை அழைத்து வர சிறப்பு ரயில்கள் தேவை எனும் நியாயமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.
உள்ளம் பதம் செய்யும் வள்ளுவர் எங்கள் தமிழரின் இல்லம் நிறைந்து வாழ்பவர். இருள் படிந்த மனங்களின் இண்டு இடுக்கெல்லாம் கைவிளக்கொளி பாய்ச்சிய ஞானப் புலவர். திருவள்ளுவர் நாள் தமிழருக்குத் திருநாள். வள்ளுவன் வாய்ச் சொல்கொண்டு வாழ்வோம்.
அச்சத்தில் இருந்து துணிவுக்கு;
ஊழலில் இருந்து நேர்மைக்கு;
தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாக பொங்குக பொங்கல்.
பொள்ளாச்சியில் அடாது பெய்யும் மழையிலும், விடாது ஒலிக்கிறது நாளை நமதே எனும் முழக்கம். இனி நன்மைகளே தமிழகத்தில் நடக்கும். வெற்றி எமதே!
கோபிச்செட்டிப்பாளையம் மார்க்கெட் 9 மாதங்களாகத் திறக்கவில்லை. 900 குடும்பங்கள் பட்டினி கிடக்கிறார்கள். எதையெதையோ திறந்து கல்லா கட்டுபவர்களே, அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் உங்களைத் தேய்ப்பது திண்ணம்.
திருப்பூரில் மக்கள் வெள்ளம் புதிய எல்லைகளைத் தொடுகிறது. வெற்றி நமதே எனும் ஆர்ப்பரிப்பில் நெகிழ்கிறேன். மாற்றம் சமீபித்து விட்டதென்பதை தமிழகத்திற்கு அறிவிக்கிறது கொங்கு மண்டலத்தின் சங்க நாதம்.
காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே...
கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க,அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது.போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது,பேனர்களைச் சிதைப்பது,போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது. கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ?
End of content
No more pages to load